சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

சிறுதொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

டெல்லி, மே-22

டெல்லியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது;-

உலகப் பொருளாதார மந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இந்திய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளும். இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரோனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது.

சிறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி குறைந்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வழங்கப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப் பிரச்னைகளை சரி செய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுபத்தவும் ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு பற்றாக்குறையை சரிசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. மானாவரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது.

வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, வங்கிக் கடன் தவணைகளை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுபோல, கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *