தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதி மக்களுக்கு காய்கறி தொகுப்புகளை வழங்கிய அமைச்சர் SP வேலுமணி..
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
கோவை, மே-21

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அந்த வகையில், கோவையில் தனது தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு நிவாரணப்பொருட்களை, அமைச்சர் வேலுமணி வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கி வருகிறார்.
அதன்படி, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.