ராணா டகுபதி & மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்த புகைப்படங்கள்..

ராணா டகுபதி & மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஐதராபாத், மே-21

கடந்த 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாக ராணா டகுபதி திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியான மிஹீகா பஜாஜை சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர்.

இந்நிலையில் தனக்கும் மிஹீகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்களில் அறிவித்து அதன் புகைப்படங்களையும் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *