அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவுகள்.. விருந்துகள், வெளிநாட்டு பயணங்களுக்கு தடை.. தமிழக அரசு அரசாணை..

கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஈடு செய்ய பல்வேறு செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-21

கொரோனா வைரஸ் தொற்றால் ஒவ்வொரு மாநிலங்களும் மிகப்பெரிய அளவில் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

*அரசு விழாக்களில் சால்வை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

*தமிழக அரசு அலுவலங்கங்களுக்கான செலவுகளில் 20 சதவிகிதம் குறைக்க உத்தரவிட்டுள்ளது

*மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும்

*விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அரசு அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை.

*விளம்பரச் செலவகளை 25% குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

*அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.

*சுகாதாரம், காவல், தீயணைப்பு துறைகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு மட்டும் வாகனங்கள் வாங்க அனுமதி.

*அரசு அதிகாரிகளின் தினப்படி 25% குறைப்பு ;நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி

*சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி

*மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி

*அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

*அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

* அரசு அலுவலகங்களில் புதிதாக பணியிடங்களை உருவாக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *