பிரதமர் மோடி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்து..காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு

பிரதமர் நரேந்திர மோடி குறித்து டிவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக சோனியா காந்தி மீது வழக்கு பதிவு விடப்பட்டுள்ளது.

டெல்லி, மே-21

பேரிடர் காலங்களில் மக்கள் நிதி பங்களிப்பு மூலம் அரசுக்கு உதவுவதற்காக இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூடங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நிதி குறித்து காங்கிரஸ் கட்சி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் வழக்கறிஞர் பிரவீன் கே.வி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று (புதன்கிழமை) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி அளிக்கப்பட்ட புகாரின்படி, மே 11 மாலை 6 மணிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் பிரதமர் நிதியை தவறாகப் பயன்படுத்துவதாக பிரதமருக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது. அந்த சுட்டுரைப் பக்கத்தைக் கையாளும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சோனியா காந்தி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்திலுள்ள சாகர் காவல் துறையினர் 153 மற்றும் 505 (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குப்பதிவுக்கு கர்நாடக காங்கிரஸ் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *