எம்எல்ஏ கருணாஸின் தனி பாதுகாப்பு காவலருக்கு கொரோனா..!

நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் தனி பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மே-21

நகைச்சுவை நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். கருணாஸ் கடந்த 2016ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவாடைனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் நிற்க சீட் வழங்கினார். இதன் மூலம் அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கருணாஸ் எம்எல்ஏவின் தனிப்பாதுகாவலராக உள்ளவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து, எம்.எல்.ஏ. கருணாஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *