இந்தியாவில் ஒரே நாளில் 5000 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1,12,442 ஆக உயர்வு.. இதுவரை 3435 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,442 ஆக உயர்ந்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45422 பேர் மீண்டுள்ளனர்.

டெல்லி, மே-21

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 112442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5609 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 132 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3435 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45422 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3002 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 39,297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,390 பேர் பலியாகியுள்ளனர். அடுத்தப்படியாக குஜராத்தில் 12,537 பேரும், தமிழகத்தில் 13,191 பேரும், தலைநகர் டெல்லியில் 11,088 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *