இளைஞர்களின் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி!!!

வயநாடு, அக்டோபர்-04

கேரளாவையும் கர்நாடகாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளதால், இரவு நேரங்களில் அந்த நெடுஞ்சாலை வழியாக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேதரி என்ற நகரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாக உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேசிய நெடுஞ்சாலை இரவு நேரங்களில் பயணிக்க உள்ள தடையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு உள்ளதாக குறிப்பிட்டார். இந்த தடை காரணமாக கர்நாடகா, கேரளா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டு வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *