டிவி விவாதத்தில் எம்.பி.ஜோதிமணியை ஒருமையில் பேசிய பாஜக பிரமுகர்.. டிரெண்டான #I_Stand_With_Jothimani..!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு ஆதரவாக டிவிட்டரில் #I_Stand_With_Jothimani என்ற டேக் வைரலாகி வருகிறது.

சென்னை, மே-19

நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக எம்பி கலாநிதி உள்ளிட்டோருடன் பாஜகவின் கரு நாகரான் கலந்துகொண்டார். விவாதத்தில் ஜோதிமணி கொரோனா காலத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பேசிக்கொண்டு இருந்தபோது பாஜகவின் கரு நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி இழிவுபடுத்தினார்.

இதனையடுத்து ஜோதிமணி அந்த விவாதத்தில் இருந்து வெளியேறினார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக எம்பி கலாநிதி வீராசாமியும் விவாதத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ஜோதிமணிக்கு ஆதரவாக கருநாகராஜனுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இனிமேல் கரு நாகராஜன் கலந்துகொள்ளும் விவாதங்களில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை எனப் பலரும் அறிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோதிமணிக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். தமிழக அளவில் மட்டுமின்றி தேசிய அளவில் ஜோதிமணிக்கு ஆதரவாக குரல்கள் பதியப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சியினர் ஜோதிமணிக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இதனால் தேசிய அளவில் தற்போது #I_Stand_With_Jothimani என்ற டேக் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *