உலகையே மிரட்டி எடுக்கும் கொரோனா.. 50 லட்சத்தை நெருங்கியது பாதிப்பு..3.20 லட்சம் பேர் பலி..

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது.

மே-19

சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வைரசின் தீவிரம் அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 48 லட்சத்து 94 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்து 180 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 7992 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடமும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேபோல் ரஷ்யாவில் 2,90,678, ஸ்பெயினில் 2,78,188, பிரிட்டனில் 2,46,406, பிரேசிலில் 2,55,368, இத்தாலியில் 2,25,886, பிரான்சில் 1,79,927, ஜெர்மனியில் 1,77,289, துருக்கியில் 1,50,593, ஈரானில் 1,22,492, இந்தியாவில் 100,328, சீனாவில் 82,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *