தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 11,760ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று புதிதாக 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மே-18

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 364 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 3 பேர் பலியானதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், இதுவரை மொத்தம் 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *