புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு.. காலை 7 முதல் இரவு 7 வரை மது விற்கப்படும் என அறிவிப்பு..

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, மே-18

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதுச்சேரியில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *