உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற தமிழச்சி இளவேனில்

ரியோ டி ஜெனிரோ ஆகஸ்ட் 29
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள் மற்றும் பிஸ்டல்) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கலந்து கொண்டு 251.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவர் இங்கிலாந்து வீராங்கனை மிஷின்டோசை பின்னுக்கு தள்ளி தங்கப்பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் பெற்றார். 20 வயதான இளம் வீராங்கனையான இளவேனி கடலூரில் பிறந்தவர். தற்போது அவர் குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.