ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு.. அட்டவணை வெளியீடு..

நாடு முழுவதும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.

டெல்லி, மே-18

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு அட்டவணையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் சிபிஎஸ்இ பயிலும் மாணவர்களுக்கு என தனித்தனியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி தவிர்த்து பிற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஜூலை 13-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. டெல்லியில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.

டெல்லியில் விடுபட்ட சிபிஎஸ்இ 10ம் வகுப்பு போதுத் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *