நாடு முழுவதும் மே 31 ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு- மத்திய அரசு.. மாநில அரசுகளுக்கு அதிரடி அனுமதி..

நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா நிலைமைப்படி சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை மாநிலங்கள் தீர்மானித்து கொள்ளலாம். இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி என மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லி, மே-17

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்து 90,927 ஆக உயர்ந்தள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 3-ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்தப் பொது முடக்கம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறுவுறுத்தியது. இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது;

 • இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க உத்தரவு.
 • உள்நாட்டு மருத்துவசேவை விமானங்கள் தவிர அனைத்து உள்நாட்டு, சர்வதேச விமான பயணங்களும் மே 31 வரை தடைசெய்யப்பட்டுள்ளன.
 • மெட்ரோ ரயில் சேவைகள், பள்ளிகள், கல்லூரிகள் மே 31 வரை மூடப்பட்டு உள்ளன.
 • ஹோட்டல், உணவகங்கள், சினிமா அரங்குகள், மால்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், தங்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் என அனைத்தும் இயங்காது.
 • அனைத்து சமூக, அரசியல், மத செயல்பாடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
 • கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு வீட்டுக்கு வீடு ஆய்வு நடத்தப்படும்.
 • பொது இடங்களில், பணியாற்றும் இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம்.
 • பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றம்.
 • திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம். 50 நபர்களுக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி.
 • பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • கொரோனா நிலைமைப்படி சிவப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களை மாநிலங்கள் தீர்மானித்து கொள்ளலாம்.
 • இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.
 • கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம். 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை.
 • வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தல்.
 • அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம் செய்யவேண்டும்.
 • அனைத்து விதமான சரக்கு வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர, நாடு முழுவதும் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டம் கண்டிப்பாக தடைசெய்யப்படும்.
 • மாநில அரசுகள் அனுமதித்தால் சிவப்பு மணடலங்களில் சலூன்களை திறக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *