தனுஷின் அசுரன் வெளியீடு, ரசிகர்கள் கொண்டாட்டம்…

அக்டோபர்-04

தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் இன்று வெளியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் அசுரன். இவர்கள் இருவரின் கூட்டணியில் 4-வது திரைப்படம் அசுரன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீடு முதலே அதிக எதிர்பார்ப்புகளை பெற்றது. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை அப்படியே தன் படத்தில் கொண்டு வரமுடியாது என்றாலும், தன்னால் முடிந்தளவு சமூகப்பார்வையுடன் இந்த கதையை திரைப்படமாக்கி உள்ளதாக வெற்றிமாறன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று அசுரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான திரையிரங்குகளில் தனுஷின் ரசிகர்கள் காலை முதலே வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கி படத்தை பார்த்து வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள திரையரங்குகளில் வழக்கமாக வைக்கப்படும் பேனர்கள் தவிர்க்கப்பட்டு, அதற்கு பதிலாக வண்ண வண்ண பேப்பர்கள் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் தனுஷின் ரசிகர்கள் பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர். தலைக்கவசம் கொடுத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *