தமிழகத்தில் புதிதாக 639 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 11,224 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று புதிதாக 639 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மே-17

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்து 585 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி, தமிழகத்தில் 3 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் இருந்த நிலையில் மாநிலத்தில் இன்று புதிதாக 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 6,760 ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில் இன்று 4,464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 639 பேரில் 73 பேர் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள். மேலும், இதில் கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா இருவரும், தெலுங்கானாவில் இருந்து 3 பேர், ஆந்திரத்தில் இருந்து ஒருவரும் அடங்குவர்.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *