மாற்றுத்திறனாளிகளுக்கு 31 வகை நிவாரணப் பொருட்களை வழங்கிய நல்லறம் அறக்கட்டளை..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 31 வகை நிவாரணப் பொருட்கள் – நல்லறம் அறக்கட்டளை வழங்கியது.                     

கோவை, மே 17

கோவை நல்லறம் அறக்கட்டளையின் சார்பில், புலியகுளம் விக்னேஷ் மஹாலில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பார்வையற்றோருக்கு அரிசி பருப்பு சமையல் எண்ணெய் போன்ற 31. பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை100 நபர்களுக்கு *அறக்கட்டளையின் தலைவர் எஸ் பி அன்பரசன் வழங்கினார் .

இதில் டாக்டர் விவேக் அன்பரசன், மண்டப உரிமையாளர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவையில் கொரோனா தாக்கம் இருந்த போது, கோவை மாவட்ட மக்களுக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் சுமார் 27 லட்சம் பேருக்கு 3 வேளையும், சூடான உணவு வழங்கப்பட்டது.

தொண்டாமுத்தூர் பகுதிகளில் வீட்டுக்கு வீடு 6 முட்டைகள் வழங்கிய நல்லறம் அறக்கட்டளை , தற்போது பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி சேவை செய்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *