இந்த 12 மாவட்டங்களில் எந்த தளர்வும் இல்லை.. மறுஉத்தரவு வரும் வரை தடைகளும் தொடரும்..

தமிழகத்தி​ல் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், 25 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தளர்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-17

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்

 1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சிநிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.
 2. வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடுமற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.
 3. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள்,கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (bar),உடற்பயிற்சிக்கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல்பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள்,விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்டஅரங்குகள் போன்ற இடங்கள்.
 4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு,பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள்,கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.
 5. பொது மக்களுக்கான விமானம், இரயில், பேருந்துபோக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான இரயில்போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிறபகுதிகளுக்கான இரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்குஅனுமதி கிடையாது. ( மத்திய / மாநில அரசின் சிறப்பு அனுமதிபெற்று இயக்கப்படும் விமானம், இரயில், பொதுப்பேருந்துபோக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும்.)
 6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா.
 7. மெட்ரோ இரயில் / மின்சார இரயில்.
 8. தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும்ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.
 9. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.
 10. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள்தொடரும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள்:

 • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.
 • நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்குவெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
 • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (containment zones)தற்போது உள்ள நடைமுறைகளின்படி,எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாககடைபிடிக்கப்படும்.
 • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர (expert containment zones) பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டபணிகளுக்கு மட்டும் அனுமதி தொடரும்.
 • பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள்தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டுபகுதிகள் தவிர (expert containment zones)பிற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்குஅனுமதி தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *