தமிழகத்தில் 25 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி.. புதிய தளர்வுகள் என்னென்ன?..

தமிழகத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

சென்னை, மே-17

புதிய தளர்வுகள்-

ஊரடங்கை படிப்படியாக விலக்குவதற்கு பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழுவின் பரிந்துரையின்படி கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்படுள்ளது.

 • கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி,மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல்,புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரிஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
 1. அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்குமட்டும் TN e-pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.
 2. மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்குமட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 3. ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
 4. அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், innova போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் 2 நபர்களும் (வாகன ஓட்டுநர் தவிர)செல்ல அனுமதிக்கப்படுகிறது.
 5. மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள25 மாவட்டங்களில் TN e-pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை, வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
 • தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் – தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களை 100 சதவீத பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
 • சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிரதமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிபகுதிகளில் தற்போதுள்ள தளர்வுபடி 50 நபர்களுக்கு குறைவாகபணிபுரியும் தொழிற்சாலைகளில் 100 சதவீதம் பணியாளர்களும்,50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பணியாளர்களுக்கும் அனுமதிவழங்கப்பட்ட நிலையில், இதை மேலும் தளர்வு செய்து100 நபர்களுக்கும் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகளில்,100 சதவீதம் பணியாளர்களும், 100 நபர்களுக்கு மேல்பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில்,50 சதவீதம் பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம்100 பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
 • ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார்மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப்பணிகளுக்காக (manitenance) மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி.
 • 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணிமட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.
 • தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனிபயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்களிக்கப்படுகிறது. இதற்காக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும், சென்னை மாநகர ஆணையரிடமும் அனுமதி பெற வேண்டும்.
 • மாவட்டங்களுக்குள் போக்குவரத்துஅனுமதிக்கப்படாத12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்குமட்டும் சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்குமட்டும் விலக்களிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *