இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டியது…இதுவரை 2,872 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 2872 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி, மே-17

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக உயர்ந்துள்ளது.
பலியானோரின் எண்ணிக்கை 2752-ல் இருந்து 2872 ஆக உயர்ந்துள்ளது. 34,109 பேர் குணமடைந்துள்ளனர். 53,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1135 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7088 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் மீண்டும் குஜராத் மாநிலம் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. நேற்று 3-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் 10,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 625 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4308 பேர் குணமடைந்துள்ளனர். இந்த பட்டியலில் தமிழகம் மீண்டும் 3-வது இடத்திற்கு சென்றுள்ளளது. தமிழகத்தில் 10,585 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3538 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய 11-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *