கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சூறாவளியாக சுழன்று நிவாரணப்பொருட்களை வழங்கும் SP வேலுமணி..! மக்கள் மத்தியில் வரவேற்பு..

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை, மே-16

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில், கோவையில் தனது தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு நிவாரணப்பொருட்களை, அமைச்சர் வேலுமணி வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கி வருகிறார்.

அதன்படி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இதற்கு அப்பகுதி மக்கள் அமைச்சர் வேலுமணிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2 அவசர ஊர்திகளை இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *