தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா..பாதிப்பு 10,585ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மே-16

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-

தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களைத் தவிர்த்தால் தமிழகத்தில் மட்டும் இன்று 384 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலிருந்து விமானம் மூலம் வந்த 4 பேருக்கும், மகாராஷ்டிரத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 81 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 7 பேருக்கும், ஆந்திரத்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 93 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 3 பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 939 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,538 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 10,535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம், மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,13,639 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *