ஆந்திராவில் பூரண மதுவிலக்கு, அடுத்த ஆண்டு முதல் அமல்

ஹைதரபாத், அக்டோபர்-03

ஆந்திராவில் தனியாரால் நடத்தப்பட்ட 3,448 மதுபான விற்பனை கடைகளை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ள மாநில அரசு, அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இந்த வாக்குறுதியை செயல்படுத்தும் வகையில் 4,380 ஆக இருந்த மதுபான விற்பனை கடைகள் எண்ணிக்கையை 3,448 ஆக ஆந்திர அரசு குறைத்தது. இதையடுத்து அந்த கடைகளையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் ஆந்திர அரசு கொண்டு வந்துள்ளது.

ஹைதராபாதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் கே. நாராயண சுவாமி, அக்டோபர் 1ம் தேதியுடன் உரிமம் முடிவடைந்த அனைத்து மதுபான விற்பனை கடைகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு விட்டதாக குறிப்பிட்டார். படிப்படியாக மதுபான பயன்பாட்டை குறைத்து, முடிவில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்படுமென்றும் நாராயண சுவாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *