கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா..! 85940 பேர் பாதிப்பு..

கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா முந்தியதுடன், உலக அளவில் 11வது இடத்திற்கு சென்றுள்ளது.

டெல்லி, மே-16

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 85940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 30153 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா முந்தியதுடன், உலக அளவில் 11வது இடத்திற்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் வெளிப்பட்ட சீனாவில் இதுவரை 82941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4633 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *