தமிழகத்தில் புதிதாக 434 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,108ஆக அதிகரிப்பு..

தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மே-15

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 9 ஆயிரத்து 674 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 240 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 434 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 309 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *