3ம் கட்ட‍ அறிவிப்பில் யாருக்கு என்ன பலன்?.. நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் முழு விவரம்..

விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லி, மே-15

பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தன்னிறைவு இந்தியா திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

அறிவிப்புகளின் முழு விவரம்;-

 • விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க கடந்த 2 மாதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 • குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் ரூ.74,000 கோடி மதிப்பிலான விவசாய உற்பத்தி பொருட்கள் ஊரடங்கு காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
 • பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6,400 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது.
 • 5.60 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டது.
 • ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் சராசரியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
 • மீன்பிடித் தொழில் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு போன்றவை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது
 • விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப நிலைத் தொடர் நிலையங்கள் போன்றவற்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன.
 • 1 லட்சம் கோடி ரூபாய் வேளாண் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும்.
 • மார்ச் 31ஆம் தேதியுடன் காலாவதியாகும் இறால் பண்ணைகளுக்கான பதிவு 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.
 • 10 ஆயிரம் கோடி சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும்.
 • சிறு உணவு நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது.
 • உணவு சார்ந்த சிறு நிறுவனங்களுக்கு 10,000 கோடி.
 • இதன் காரணமாக இரண்டு லட்சம் சிறு உணவு உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும்.
 • காஷ்மீர் குங்குமப்பூ, பீகார் சோளம், தமிழ்நாட்டில் மரவள்ளிகிழங்கு, ஜவ்வரிசி, ஆந்திரா மிளகாய் போன்றவற்றிக்கு முக்கியத்துவம்.
 • மீண்டும் பிரதமரின் கிசன் சம்பட யோஜன திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட உள்ளன.
 • கடல் சார்ந்த மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 11,000 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளன.
 • இதன் காரணமாக ஏராளமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
 • கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்த அனைத்து விதமான கால்நடைகளுக்கும் 100% தடுப்பு மருந்து இடப்படும்
 • 53 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
 • கால்நடைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாய் மற்றும் கால் சார்ந்த நோய்களை தடுக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.
 • பால் உற்பத்தித் துறையில் சுமார் 15,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளன.
 • பால் – நெய் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த பொருள் உற்பத்தி இதன் மூலம் அதிகரிக்கும்
 • பால், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய முன் வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
 • மூலிகை மருந்து தாவரங்கள் பயிரிடுபவர்களுக்கு உதவ 4000 கோடி.
 • மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 • 2 லட்சம் தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ 500 கோடி. தேனீ வளர்ப்பின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
 • வெங்காயம் பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப் படுகின்றன. சில எண்ணெய் வகைகளும் இவற்றில் அடங்கும்.
 • வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *