கொரோனாவிலும் எகிறியடிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.152 உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 152 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை, மே-15

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.சென்னையில் இன்று (மே 15) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,484 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,465 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 35,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 152 ரூபாய் உயர்ந்து 35,872 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை இன்று மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.46.80 ஆக இருந்தது. ஆனால் இன்று அதன் விலை ரூ.48.30 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 48,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *