விவசாயிகள் வியாபாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்.. முழு விவரம்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறு விவசாயிகள், தெருவோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் போன்றோருக்கு இன்று திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

டெல்லி, மே-14

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறு விவசாயிகள் தெருவோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் போன்றோருக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 3 திட்டங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், ஒன்று தெருவோர தொழிலாளர்களுக்காகவும், 2 திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கும் உள்ளது.

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் முழு விவரம்;-

 • நாடு முழுவதும் 3 கோடி விசாயிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
 • கடன் பெறும் விசாயிகள் முதல் 3 மாதங்களுக்கு தவணை கட்ட தேவையில்லை என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
 • கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
 • மே 31ம் தேதி வரை விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 • கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் விவசாயக் கடன் அட்டைகளை அளித்துள்ளோம்.
 • நபார்டு உள்ளிட்ட வங்கிகள் மூலமாக விவசாயத்துறைக்கு கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது
 • ரூ.6700 கோடி மாநில அரசுகளுக்கு விவசாய கொள்முதலுக்காக வழங்கப்பட்டுள்ளது
 • 3 கோடி விவசாயிகள் கடன்களுக்கு தவணை செலுத்துவதிலிருந்து 3 மாத விலக்கு பெற்றனர்.
 • மார்ச்-1 முதல் ஏப்ரல் 30 வரை ரூ.86600 கோடி மதிப்பில் 63 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன
 • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்க இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள அனுமதியளித்தோம்.
 • நகர்ப்புறத்தில் வாழும் வீடில்லா ஏழைகளுக்கு மத்திய அரசின் சார்பில் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது
 • 12,000 சுய உதவிக் குழுக்கள் மூலம் 3 கோடி முக கவசங்கள், 1.20 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளன.
 • சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை.
 • தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஏற்கனவே 2.33 கோடி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது
 • பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பணி வழங்க வேண்டும் – இரவு பணியும் சரியான பாதுகாப்புடன் வழங்க வேண்டும்
 • அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்தல்.
 • அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ சோதனையை கட்டாயம்.
 • பத்து ஊழியர்களுக்கும் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ. பலன்களை வழங்கப்படும்.
 • அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய முழு உடல் பரிசோதனை வழங்கும் திட்டம் உள்ளது.
 • ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும்.
 • 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும்.
 • இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட உள்ளது.
 • மாநில அரசுகள் இதற்கு தகுதியான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண்பார்கள்.
 • ஒருவருக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ பருப்பு போன்றவை வழங்கப்படும்.
 • ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
 • 23 மாநிலங்களில் உள்ள 67 கோடி பயனாளர்கள் பயன்பெறுவார்கள்.
 • புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளை நாடு முழுவதும் பயன்படுத்த வகை செய்யப்படும்.
 • மார்ச் 2021 உள்ளாக இவற்றை நடைமுறைப்படுத்தி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
 • புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறைந்த விலை குடியிருப்பு வசதி.
 • தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வாடகை வீடு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.
 • பெரிய நகரங்களில் உள்ள பயன்படாத அரசு குடியிருப்புகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும்.
 • தனியார் கட்டிடங்களையும் இதன் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
 • இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
 • தொழில் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை உருவாக்கலாம் அதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
 • சரியாக கடனை கட்டக்கூடிய சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்
 • 50,000 ரூபாய்க்கு குறைவான முத்ரா கடன்களுக்கான வட்டி 2% குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடி ரூபாய் வட்டி மானியமாக வழங்கப்பட உள்ளன
 • 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தியாவில் உள்ளனர்.
 • ரூ.5000 கோடி மதிப்பில் சிறப்பு நிதி உதவி ஒருவருக்கு 10,000 ரூபாய் வரை கடன் வசதி.
 • சாலையோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனமாக பத்தாயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *