பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்பு, மூலிகை வளர்ப்பு உள்ளிட்ட பிரிவில் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லி, மே-14

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘சுயசார்பு இந்தியா’ என்ற பெயரில் முதல்கட்டமாக ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்காக வேலைவாய்ப்பு திட்டங்கள் உருவாக்கப்படும். பழங்குடியினர் நலனுக்காக காடுகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காடுகள் தொடர்பான துறையில் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். பழங்குடி நலன்சார்ந்த 6 ஆயிரம் கோடி மதிப்பிலான மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட திட்டங்களுக்கான ஒப்புதல் 10 நாள்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *