இடைத்தேர்தல்: வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு

அக்டோபர்-03

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கி 30 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனையை தொடர்ந்து மனுக்களை திரும்பப்பெறுவதற்கான அவகாசமும் முடிவடைந்தது.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையில் 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், சுயேட்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதேபோல் விக்கிரவாண்டியில் மொத்தம் 15 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டநிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வாபஸ் பெற்றனர். இதனால் 12 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனையில் 11 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் 2 சுயேட்சைகள் மனுக்களை திரும்பப் பெற்றதையடுத்து 9 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *