சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 1 வரை தள்ளுபடி.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 1 வரை தள்ளுபடி செய்யப்பட்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடனுக்கான வட்டி தள்ளுபடி சலுகையால் 3 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

டெல்லி, மே-14

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

கடந்த 3 மாதங்களில் 3 கோடி விவசாயிகளுக்கு ரூ. 4. 22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 63 லட்சம் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ந்தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு வழங்கி ரூ 25 ஆயிரம் கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து 63 லட்சம் விவசாய கடன்கள் ரூ. 86 ஆயிரம் கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும் உணவு வழங்கவும் ரூ. 11, 000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 3 கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு மாநிய விலையில் தந்த கடனுக்கான வட்டியை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளை உள்ளடக்கிய 7, 200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் வீடற்றவர்களை தங்கவைக்கும் முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *