மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு கட்டாயம் 14 நாட்கள் தனிமை.. தமிழக அரசு அதிரடி..

கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த புதிய வழிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-14

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:

ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே கொரனா சோதனை செய்யப்படும்.

சோதனை உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை, இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களில் உடனடியாக மருத்துவமனை செல்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்கள், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *