சென்னை ராயபுரத்தில் 890 பேருக்கு பாதிப்பு.. மண்டல வாரியான விவரம் வெளியீடு..

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-14

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க.நகரில் 662 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 835 பேருக்கும், அண்ணாநகரில் 448 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *