இன்று மேலும் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு மேலும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

டெல்லி, மே-14

பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்த தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களில் ரூ.3.60 லட்சம் கோடிக்கான திட்டங்களை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் சில புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *