ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து.. ரயில்வே அதிரடி அறிவிப்பு..

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணத்தை ரயில்வே திரும்ப செலுத்திவிடும். வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயிகள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மே-14

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் மூன்று கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கின்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பல்வேறு தொழில்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரெயில்கள் கடந்த 1-ந்தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றனர். இதேபோல் ரெயில் போக்குவரத்தை மீண்டும் துவங்க முடிவு செய்த ரெயில்வே, படிப்படியாக ரெயில் சேவை துவக்கப்படும் என அறிவித்தது.

மே12ம் தேதி ஐஆர்டிசி இணையதளத்தில் ரயில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்திருந்தது

இந்த நிலையில் இன்று ஜூன் 30ம் தேதி வரை ரயில் பயணிகள் பதிவு செய்த முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு உரிய பணத்தை அவர்களது வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஜூன் 30ம் தேதி வரையில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் செயல்முறை தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட்டு, முழு கட்டணமும் திருப்பித் தரப்படும். சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *