இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஈ.பி.எஸ்.

சென்னை, அக்டோபர்-03

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வருகிற 12-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி…

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளார்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவை எதிர்த்தும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரசை எதிர்த்தும் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. 12, 13, 16 ஆகிய தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், 14, 15, 18 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *