சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் நாளை முதல் முகக் கவசம் வினியோகம் – அமைச்சர் SP வேலுமணி

சென்னை, மே-14

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் நாளை முதல் முகக் கவசம் வினியோகம் செய்யப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

ஒருவருக்கு 2 முகக்கவசம் வீதம் மொத்தம் 52 லட்சம் முகக்கவசங்கள் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *