இந்தியாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா.. 78 ஆயிரத்தை கடந்த பாதிப்பு..2549 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2549 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மே-14

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 78003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26235 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 25922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 975 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 9267 பேருக்கும், தமிழகத்தில் 9227 பேருக்கும், டெல்லியில் 7998 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4173 பேருக்கும், ராஜஸ்தானில் 4328 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3729 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *