கொரோனா தாக்கம் எதிரொலி..வக்கீல்கள் கருப்பு கவுன், கோட் அணிவதில் இருந்து விலக்கு.. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வக்கீல்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

டெல்லி, மே-14

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராகும் போது வக்கீல்கள் கருப்பு கோட், கருப்பு கவுன், வெள்ளை கழுத்து பட்டை ஆகியவற்றை அணிவது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பிறப்பித்த உத்தரவின் பேரில் உச்சநீதிமன்ற செகரட்டரி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது;-

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையிலும் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைகளில் ஆஜராகும் வக்கீல்கள் இனி சாதாரணமான வெள்ளை சட்டை, வெள்ளை சல்வார் கமீஸ் அல்லது வெள்ளை புடவை மற்றும் வெள்ளை கழுத்துப் பட்டையை தற்போதைய சுகாதார சூழ்நிலை உள்ளவரை அல்லது அடுத்த உத்தரவு வரை அணிந்து கொண்டு காணொலி மூலம் விசாரணையில் கலந்து கொள்ளலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *