லாக்டவுன் உபயத்தால் ஷாப்பிங் மால்களில் உள்ள தோல் பொருட்கள் முழுவதும் பூஞ்சைகள்..

மலேசியாவில் பல நாட்களாக பூட்டியே உள்ள மால்களில் உள்ள கடைகளில் தோல் பொருட்களில் பூஞ்சைகள் உருவாகி உள்ளது.

கோலாலம்பூர், மே-14

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஷாப்பிங் மால்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடியே கிடக்கிறது. கடந்த திங்கள்கிழமை முதல் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்ட போதிலும் மால்களை திறக்க அனுமதி இல்லை. இந்த நிலையில் மால்களில் ஷூ கடைகள், ஹேண்ட் பேக் கடைகள், பெல்ட் கடைகள், துணிக் கடைகள் திறக்கப்படாமல் நீண்ட நாட்களாக பூட்டியே கிடப்பதால் அந்த பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள மெட்ரோ ஜெயசூர்யா சுபா என்ற மாலில் வைக்கப்பட்டுள்ள தோல் பொருட்களான ஷூக்கள், பேக்குகள், பர்ஸ்கள் உள்ளிட்டவையும் துணிகளும் பூஞ்சை பிடித்து காணப்படுகின்றன. மலேசியாவில் கடந்த மார்ச் 18-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த மால்கள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டன.

அப்போது அங்கிருந்த தோல் பொருட்கள், துணிகள் எல்லாம் பூஞ்சை பிடித்து வீணாகி போய் இருப்பதை அந்த கடை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பொருட்களின் விலை ஒவ்வொன்றும் 5 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கும் என மாலின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

மால்கள் முழுவதும் சென்ட்ரல் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏசிக்கள் கடந்த இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் காற்றோட்டம் இல்லாததால் இவை வீணாகி போயுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *