தமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா.. சென்னையில் ஒரே நாளில் 380 பேர் பாதிப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது.

சென்னை, மே-13

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 8 ஆயிரத்து 718 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 134 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,666 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,68,250 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 380 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *