வருமான வரி தாக்கல் கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிப்பு
2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மே-13

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில்:-
2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31 தேதி இறுதி நாளாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருமான வரித்தாக்கல் கெடு தேதி ஜூலை 31-ம் தேதியில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதாவது, டிடிஎஸ் வரிப் பிடித்தம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 25% ஆகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் ரூ. 50 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கம் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிடித்தம் குறைப்பு நாளை முதலே அமலுக்கு வருகிறது. மேலும் வருமான வரிக் கணக்குத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30ம் தேதி வரை சுமார் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.