சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பில் மாற்றம்

சிறு, குறு தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு அதிகரிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மே-13

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

அதன்படி, சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாகவும், எனவே அடமானம் ஏதும் இல்லாமல் சிறு, குறு நிறுவனங்கள் வங்கிக்கடன் பெறலாம் என்றும் மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் துணைக்கடனாக வழங்கப்படும் என்றார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெறும் கடனை ஓராண்டுக்கு திருப்பி செலுத்த தேவையில்லை என்ற சலுகையையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பில் தளர்வுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ஒரு கோடியாகவும், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறு தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு ரூ. 5 கோடியிலிருந்த ரூ. 10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம். முதல் ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப்படாது.
வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய கடன் கிடைக்க அரசே உத்தரவாதம் தரும். ரூ. 100 கோடி வியாபரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ. 25 கோடி கடன் இருந்தால் கூடுதல் கடன் தரப்படும். முதலீடு ரூ. 1 கோடியாக இருந்தாலும் சேவை அளிக்கும் நிறுவனம் சிறு, குறு, நடுத்தர நிறுவனமாக கருதப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *