ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கும் பி.எஃப். தொகையை அரசே செலுத்தும்..நிர்மலா சீதாராமன்

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே செலுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மார்ச், ஏப்ரல், மே 3 மாதங்களுக்கான தொழிலாளருக்கான பங்கை மத்திய அரசு செலுத்தியது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

டெல்லி, மே-13

அடுத்த 3 மாதங்களுக்கும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையையும் (பி.எஃப்.) மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புத் தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு பி.எஃப். தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் அடுத்த 3 மாதங்களுக்குமான பி.எஃப். தொகையையும் மத்திய அரசே செலுத்தும் என்று அறிவித்துள்ளார்.

வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும் என்றும், ஏற்கனவே 3 மாதங்களுக்கு பிஎஃப் சந்தாவை அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த காலாண்டில் தொழிலாளர்களும் நிறுவனங்களும் பி.எஃப். தொகையை 10% செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊதியத்தில் 12 சதவீதம் என்பது பி.எஃப். தொகையாக இருக்கும்பட்சத்தில், அடுத்த காலாண்டில் 10 சதவீத பிஎஃப் தொகையை செலுத்தும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பங்குத் தொகையை அரசு செலுத்துவதால் 72 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *