பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடியில் என்னென்ன திட்டங்கள்? – இன்று மாலை அறிவிக்கிறார் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்த அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை வெளியிட உள்ளார்.

டெல்லி, மே-13

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் யாருக்கு சென்றடையும் என்பது குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை வெளியிட உள்ளார். சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடன் அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழும் கூடுதல் கடன் திட்டங்கள் இந்த அறிவிப்பின் கீழ் இடம்பெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *