பிரதமரிடம் விருது, முதல்வரிடம் வாழ்த்து, வெல்லும் வேலுமணி…

சென்னை, அக்டோபர்-03

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கிடைத்துள்ள சிறந்த மாநிலத்துக்கான விருதினை முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து பெற்றார்.

ஊரக தூய்மை கணக்கெடுப்பு 2019-ன் கீழ் ஊரக பகுதிகளின் சுகாதாரம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதினை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தூய்மை பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு கிடைத்த விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது தலைமை செயலர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *