ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு.. அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-12

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27-ந்தேதி தொடங்கும். அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 10 கல்லூரிகளில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் பாடங்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு அட்டவணை விவரம்:-

ஜூன் 1-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 3-ந்தேதி : ஆங்கிலம்
ஜூன் 5-ந்தேதி : கணிதம்
ஜூன் 8-ந்தேதி : அறிவியல்
ஜூன் 10-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 6-ந்தேதி : விருப்ப மொழிப்படம்
ஜூன் 12-ந்தேதி : தொழிற்பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *