நீண்ட காலம் மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்..! தமிழக முதல்வருக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து..!

பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது வாழ்த்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, மே-12

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மே 12-ம் தேதி தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பிரதமர் மோடி தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் அவர் மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக முதலமைச்சர் அன்பு சகோதரர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் அருளோடு உடல் ஆரோக்கியத்தோடு , நீண்ட ஆயுளோடு மக்கள் பணியாற்ற இந்த பிறந்த நாளில் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறி உள்ளார்.

முதல்வர் பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று பிறந்தநாள் நாள் காணும், மாண்புமிகு முதல்வர் அன்பு அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் பல்லாண்டு வாழ எனது உளமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *