மே 17-க்குப் பின் ஊரடங்கு நீட்டிப்பு.. பிரதமர் மோடி சூசகம்..

மே 17-ந் தேதிக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி, மே-12

கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, லாக்டவுன் மே 17-ந் தேதிக்குப் பின்னர் மேலும் நீட்டிக்கப்படும் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அதேநேரத்தில் தற்போதைய கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ட ஒரு லாக்டவுனாக அது நீடிக்கும் என்றும் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது, முதல் ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் 2-வது ஊரடங்கில் தேவைப்படவில்லை. 3-வது ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் 4-வது ஊரடங்குக்கு தேவையில்லை. ஊரடங்கை தளர்த்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய முதலமைச்சர்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மே-17ஆம் தேதிக்கு பிறகும், சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என, பிரதமர் மோடியின் பேச்சில் இருந்து தெரிவதாக முதல்வர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *